இலங்கை பொதுத் தேர்தல் – படுதோல்வி அடைந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
இலங்கை பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ படுதோல்வியடைந்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 12 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி குருநாகல் மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ படுதோல்வியடைந்து தனது ஆசனத்தை இழந்துள்ளார்.
அதற்கமைய, குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசனத்தைப் பெறத் தவறிவிட்டது.





