இலங்கையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!
இலங்கையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் வருடத்திற்கு ஒரு முறை தவறாமல், கண் பரிசோதனையை செய்து கொள்ளுமாறு தேசிய கண் நிபுணர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மங்கள தனபால இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
நாட்டின் சனத்தொகையில் 3 மில்லியன் பேர் நீரிழிவு நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர்களில் 3 இலட்சம் பேர் பார்வையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
(Visited 2 times, 1 visits today)