சிங்கப்பூர், லிட்டில் இந்தியா கொலை – குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்கள்

சிங்கப்பூர்-லிட்டில் இந்தியாவின் கிட்சனர் ரோடு கொலைச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் சம்பவ இடத்திற்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்.
இம்மாதம் 22ஆம் திகதி வெர்டன் ரோட்டில் அதிகாலை வேளையில் சிலருக்கு இடையே சண்டை ஏற்பட்டது.
அதில் ஒருவரிடம் ஆயுதம் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.சண்டையில் மூவர் காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவரான 25 வயது தினேஷ் வாசி மோதலில் உயிரிழந்துள்ளார்.
முகமது சஜிட் சலீம் எனும் 22 வயது ஆடவர் தினேஷைக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சத்தீஷ் ஜேசன் பிரபாஸ், கிருத்திக் ரோஷன் பிரேம் ஆனந்த், பிரதேவ் சஷி குமார், நூர் டியானா ஹரூன் அல் ரஷித், கஸ்தூரி காளிதாஸ் மாரிமுத்து ஆகியோர் மோதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்கள் ஒவ்வொருவரும் சம்பவம் நடந்ததாக நம்பப்படும் வெர்டன் சாலையில் உள்ள காப்பிக் கடைக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.