உயிரணுக்களில் இருந்து எச்ஐவியை அகற்றி விஞ்ஞானிகள் சாதனை!

பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் இருந்து எச்ஐவியை அகற்றுவதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக நோபல் பரிசு பெற்ற Crispr எனும் மரபணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நுட்பம் பாதிக்கப்பட்ட உயிரணுக்களின் டிஎன்ஏவை சிறிய துண்டுகளாக உடைத்து அவற்றை நீக்குகிறது அல்லது செயலிழக்கச் செய்கிறது.
அதன் மூலம் ஒருவரது உடலில் உள்ள வைரஸ்களை முற்றிலுமாக அகற்றி விடலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஆனால் அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து மேலும் சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்பது அவர்களின் கருத்து.
தற்போது பயன்பாட்டில் உள்ள எச்ஐவி மருந்துகள் வைரஸின் பரவலைத் தடுக்கலாம், ஆனால் அதை உடலில் இருந்து அகற்ற முடியாது.
(Visited 12 times, 1 visits today)