ஐரோப்பா

ஜெர்மனிக்கு வெளிநாட்டு பணியாளர்களை அழைக்க வேண்டாம் என கோரிக்கை

ஜெர்மனி நாட்டிற்கு பயிற்றப்பட்ட தொழிலாளர்களுடைய தேவை இருக்கின்றது.

பயிற்றப்பட்ட தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்து ஜெர்மனி நாட்டுக்கு வரவழைக்க வேண்டும் என்பதற்கான சட்டமும் இயற்றப்பட்டு இருக்கும் நிலையில் அதற்கு எதிரான கருத்துக்கள் தற்பொழுது வெளியாகி வருகின்றன.

பயிற்றப்பட்ட தொழிலாளர்களுடைய எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் அதிதீவிர வலது சாரி கட்சியான A F T என்று சொல்லப்படுகின்ற கட்சியுடைய தலைவர் சுப் போல் அவர்கள் கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதாவது அண்மை காலங்களில் ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுடைய தொகை பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தினால் வெளிநாடுகளில் இருந்து இவ்வகையான பயிற்றப்பட்ட தொழிலாளர்களை எடுக்க வேண்டும் என்பதற்காக புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.

இந்த புதிய சட்டமானது வருகின்ற 1.11.2023 இல் இருந்து நடைமுறைக்கு வருகின்ற பொழுது இந்த கட்சியுடைய தலைவரின் கருத்து வேறு வகையாக உள்ளது.

அதாவது வெளிநாட்டில் இருந்து பயிற்றப்பட தொழிலாளர்களை எடுப்பதை விட உள்நாட்டில் குழந்தைகளை பிறப்பு தொகையை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்தால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பாக 20, 30 வருடங்களில் இவ்வாறு வெளிநாட்டில் இருந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை எடுக்க வேண்டிய தேவை ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!