பொழுதுபோக்கு

GOAT படத்தில் பிரசாந்த் லுக்… ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் என படக்குழு அறிவித்திருந்தது. நியூ இயர் ஸ்பெஷலாக இரண்டு போஸ்டர்களுடன் GOAT டைட்டில் வெளியானது.

இந்தப் படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா போன்ற சீனியர் நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான போட்டோ வைரலாகி வருகிறது.

விஜய்யுடன் மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டணியே GOAT படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி, 1980களில் மாஸ் காட்டிய சில்வர் ஜூப்ளி நாயகன் மோகன், 1990களில் கெத்து காட்டிய டாப் ஸ்டார் பிரசாந்த், நடனப் புயல் பிரபுதேவா ஆகியோரும் லீடிங் ரோலில் நடிக்கின்றனர்.3

இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த பிரசாந்த், GOAT படத்தில் விஜய்யுடன் இணைந்திருப்பது இருதரப்பு ரசிகர்களுக்கும் செம்ம ஹைப் கொடுத்துள்ளது. முக்கியமாக விஜய் சினிமா கேரியரை தொடங்கும் முன்பே பிரசாந்த் உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனால் GOAT படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்தின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. அதேபோல் தான் மோகன், பிரபுதேவா இருவரது கேரக்டரும் இருக்கும் என்பது கன்ஃபார்ம்.

இந்நிலையில், இதுவரை GOAT படத்தில் இருந்து விஜய்யின் லுக் மட்டுமே வெளியாகியுள்ளது. தற்போது முதன்முறையாக பிரசாந்தின் லுக்கும் வைரலாகி வருகிறது. GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரசாந்துடன் பிரபுதேவா இருக்கும் போட்டோ இணையத்தில் லீக்காகியுள்ளது.

அதில், பிரசாந்த் கொஞ்சம் நீளமான முடியுடனும், பிரபுதேவா அவரது ட்ரேட் மார்க் ஹேர் ஸ்டைலிலும் போஸ் கொடுத்துள்ளனர். இந்த போட்டோ GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/vp_0ffl/status/1742341725501431912?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1742341725501431912%7Ctwgr%5E0b2ebfd1d05d4142defb32373cf9bc862090968a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Fgoat-prashanth-and-prabhu-deva-at-the-goat-shooting-spot-photo-is-trending-124013.html

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்