ஆம்ஸ்ட்ராங் கொலை – நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை..
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியை அடுத்துள்ளா செம்பியத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் இன்று அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி தனிப்படை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே இவரது மனைவி மோனிஷா நெல்சனிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. இதனால் இணையத்தில் மோனிஷா நெல்சனுகும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியானது. இது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் தனிப்படை காவல்துறையினர் இன்று விசாரணை செய்து வருகின்றனர்.

(Visited 13 times, 1 visits today)





