மலேசியாவில் கடைக்கு வெளியே மர்ம பெட்டி – திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
மலேசியாவில் கடைக்கு வெளியே விட்டுச்செல்லப்பட்ட பெட்டிக்குள் பச்சிளங்குழந்தை ஒன்று கண்டுபிடித்து காப்பாற்றப்பட்டுள்ளது.
ஜொகூர் மாநிலத்திலுள்ள யோங் பெங் வட்டாரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு வழக்கம்போல் கடையைத் திறக்கச் சென்ற பெண் ஒருவர் பெட்டியைக் கண்டார்.
அப்பெட்டி கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. பெண் உடனே பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தொப்புள்கொடியுடன் இருந்த அந்தக் குழந்தையை மீட்ட அதிகாரிகள் அதனைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)