அவுஸ்ரேலியாவின் அருங்காட்சியகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மர்மப் பெட்டி!

அவுஸ்திரேலியாவின் சிட்னி யூத அருங்காட்சியகத்தில் ‘சந்தேகத்திற்குரிய பொருள்’ கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சிட்னியின் CBDக்கு அருகில் உள்ள டார்லிங்ஹர்ஸ்ட் சாலையில் உள்ள அருங்காட்சியகத்தில் குறித்த சந்தேகத்திற்குரிய பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும் கண்டுப்பிடிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய பொருள் பற்றி விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரின் உதவியுடன் ஒரு வெள்ளைநிற பெட்டி அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
(Visited 25 times, 1 visits today)