சிட்னி கடற்கரைகளில் காணப்பட்ட மர்மப் பந்துகள் – சோதனையில் வெளிவந்த தகவல்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் கடற்கரைகளில் அண்மையில் மர்மப பந்துகள் சில கண்டுபிடிக்கப்பட்டடது.
மர்மப் பந்துகளில் மலம், முடி, உணவுக் கழிவுகள் போன்ற அருவருப்பூட்டும் பல பொருள்கள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
சென்ற மாதம் 2024) ஆயிரக்கணக்கான, அசுத்தமான கருமைநிறப் பந்துகள் சில கடற்கரைகளில் கரையொதுங்கின.
அந்த மர்மப் பந்துகளைத் தொடுவதைத் தவிர்க்குமாறு நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆணையம் சிட்னி குடியிருப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டது.
அவற்றை அப்புறப்படுத்துவதற்காக 7 கடற்கரைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
அந்த மர்மப் பந்துகள் என்ன, அவை எங்கிருந்து வந்தன என்பதைக் கண்டறிய பல சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
“அந்தப் பந்துகளிலிருந்து வந்த துர்நாற்றம் மிக மோசமாக இருந்தது,” என்று ஆணையத்தின் ஆராய்ச்சியாளர் கூறியிருந்தார்.