பிரேசிலில் மெதுவாக பூமியால் விழுங்கப்படும் நகரம்..? வீடுகள் சேதம் – மக்கள் வெளியேற்றம்

பிரேசிலில் அமேசான் காட்டை ஒட்டி அமைந்துள்ள சிறிய நகரம் ஒன்று அழியும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
வடகிழக்கு முனையில் உள்ள புரிடிகுபு நகரம் மெதுவாக பூமியால் விழுங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
தொடரும் மண் அரிப்புகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் வடகிழக்கில் உள்ள புரிடிக்பூ என்ற 55 ஆயிரம் பேர் வசிக்கும் நகரில் ஏற்பட்ட மண் அரிப்பால் பல வீடுகள் சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில் அங்கு காலநிலை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக, பரிமாணங்கள் அதிவேகமாக விரிவடைந்து, குடியிருப்புகளுக்கு கணிசமாக நெருக்கமாகி வருகின்றன என இந்த மாத தொடக்கத்தில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அவசர ஆணையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)