மர்மமான முறையில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவி..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த மாணவி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.
(Visited 10 times, 1 visits today)