வாழ்வியல்

சருமம் ஆரோக்கியமாக இல்லையா? உடல்நலன் பாதிப்பாக இருக்கலாம்

சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது என்பது மிகவும் அவசியமானது. முகம், கழுத்து, கைகள் என மட்டுமே அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து கவனிப்போம். பலரும் பாதங்களுக்கும் பராமரிப்பு தேவைப்படும் என்பதை மறந்துவிடுவர். ஆனால், சருமத்தின் நிலையையும் கண்காணிப்பது மிகவும் முக்கியமானது என்பது நிபுணர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது.

குறிப்பாக, சரும் ஆரோக்கியமாக இருக்க உடல்நலனும் ஆரோக்கியமும் முக்கியம். குடல் ஆரோக்கியமாக இல்லையென்றால் அது சருமத்தில் வெளிபடும். உடல் ஆரோக்கியம் சருமத்தில் தெரியும் என்கிறது மருத்துவ உலகம். குடல் பாதிப்பு ஏற்பட்டால் அது சருமத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்.

இரத்த சோகை ஏற்படுபவர்களுக்கு அதன் பாதிப்பு கண்களின் மட்டுமல்ல, முகமும் வெளீரென இருக்கும். போலவே, குடல் மகிழ்ச்சியாக இல்லையென்றாலும், ஹார்மோன் சீரற்று இருந்தாலும் அது சருமத்தில் வெளிபடும். முடிந்த அளவுக்கு உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யவும். சருமத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதை கவனித்து மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

உடல், சரும ஆரோக்கியமோ முதலில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு பெரிய டம்ளரில் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக வைக்கவும். இப்படி செய்வது பெருங்குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இது உடல்நலன் மேம்பாட்டிற்கு மிகவும் நல்லது. சரிவிகித உணவு சாப்பிடுவது, சீரான உடற்பயிற்சி, நன்றாக தூங்குவது உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.

10-3-2-1-0 பார்முலா:

தூங்க செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் உணவுகளுக்கு நோ சொல்வது, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிடுவது, தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அலுவல் சார்ந்த பணிகளை 2 மணி நேரத்திற்கு முன்னதாவே முடித்து கொள்வது, படுக்கைச் செல்வதற்கு 1 மணி நேரம் முன்னதாகவே எல்க்ட்ரானிஸ் கேட்ஜட்களைத் தவிர்ப்பது, உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் நிம்மத்தியாக தூங்கலாம். இதை பழக்கமாகவும் மாற்றிகொள்ளலாம்.

ஒழுங்கான வாழ்க்கை முறை இல்லாதது, சரியான உடல் இயக்கம் இல்லாதது ஆகியவற்றினால் தூக்கம் பாதிக்கப்படும். இரவு நேரத்தில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் பார்ப்பது உள்ளிட்ட எல்க்ட்ரானிக் கேஜட்களைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் தூக்கம் வருவதில் சிக்கல்கள் இருக்கும்.

காலை உணவை தவிர்க்க கூடாது

காலை உணவை அரசனைப் போல சாப்பிட வேண்டும் என்று சொல்வதுண்டு. நீண்ட நேர இடைவேளைக்கு பிறகு சாப்பிடும் உணவு அன்றைய நாளுக்கான ஆற்றலை வழங்கும். எந்த காரணத்திற்காகவும் காலை உணவை சாப்பிடாமல் இருக்காதீர்கள். நிறைய ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

எண்ணெய் / துரித உணவுகளை தவிர்க்கவும்

எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளை சாப்பிடுவதை குறைப்பது நல்லது. இது கல்லீரல், குடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

ஸ்நாக்ஸ் முக்கியம்

உணவுகளுக்கு இடையே ஸ்நாக்ஸ் சாப்பிடுவதும் கொஞ்சம் முக்கியம். முழுமையாக சாப்பாடு மட்டுமே சாப்பிடுதும் நல்லதல்ல. ஸ்நாக்ஸ் பிரேக் இருப்பதும் முக்கியம். ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்லது. காலை உணவாக இட்லி, சாம்பார் சாப்பிடுகிறீர்கள் என்றால் 11 மணி போல ஏதாவது பழங்கள், ஒரு கப் வேர்க்கடலை, கொண்டைக்கடலை என தானிய வகைகளாகாவும் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். இல்லையெனில் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற நிலை ஏற்படும்.

உணவுமுறையில் நல்ல மாற்றங்களை கொண்டுவர வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் விதமான உணவுகளை திட்டமிட்டு சாப்பிடுங்கள்.

 

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான
error: Content is protected !!