பிரான்ஸில் பன்றிக்கு வைக்கப்பட்ட குறியால் நபருக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் வேட்டைக்காரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் மற்றொரு வேட்டைக்காரர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. 72 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
52 வயதுடைய ஒருவர் பன்றிக்கு குறிவைத்ததில், குறி தவறி குறித்த வேட்டைக்காரர் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்துள்ளது.
இசம்பவ இடத்திலேயே வேட்டைக்காரர் பலியானார். துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸின் 2022-2023 காலப்பகுதியில் இடம்பெற்ற இதுபோன்ற அசம்பாவதங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





