இலங்கை செய்தி

காங்கேசன்துறை – காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

காங்கேசன்துறை – காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த சேவைக்கு ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காங்கேசன்துறையில் பயணிகளுக்கான சுங்க மற்றும் குடிவரவு – குடியகல்வு சாவடியை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பல் சேவையை ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ என்ற நிறுவனம் நடத்தவுள்ளது. முதலில் 120 பயணிகள் […]

இலங்கை செய்தி

கொழும்பில் கடத்திச் செல்லப்பட்ட சீன பெண் மீட்பு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் செய்த சீனப் பெண்ணை கடத்திச் சென்று அவரை விடுவிக்க 15,000 யுவான் கப்பம் கோரிய சீனப் பெண் கொள்ளுப்பிட்டி அஸ்டோரியா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சீனப் பெண், தன்னை யாரோ கடத்திச் சென்றதாகவும், தனக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகக் கூறுவதைத் தவிர்த்துக் கொள்வதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சீனப் பெண்ணின் உறவினர் ஒருவர் இந்த நாட்டிலுள்ள சீனத் தூதுவருக்கு ஏதோ […]

இலங்கை செய்தி

ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண தமிழ் இளைஞர்

  • April 11, 2023
  • 0 Comments

இன்றும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் ராஜஸ்தான் றோயல் அணியின் வலை பந்து வீச்சாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும் , சர்வதேச விளையாட்டு வீரர்களின் அறிமுகங்களும் கிடைக்கப்பெற்றன. தற்போது இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சு வீரராக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடன் குமார் சங்கக்கார கதைத்திருந்தார். […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு நாளை ( 21) விசேட உரையாற்றவுள்ளார்

  • April 11, 2023
  • 0 Comments

நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய  செயற்குழுவின் அனுமதியை  இலங்கை  பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இது குறித்து ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு நாளை ( 21) விசேட உரையாற்றவுள்ளார் இலங்கை சுதந்திரமடைந்து கடந்த 75 வருடங்களில் எமது பொருளாதார எதிர்காலத்திற்கு  இதனை விட மிகவும் நெருக்கடியான காலகட்டம் இருந்ததில்லை. எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான மற்றும் சாதகமான செயற்பாடுகளைத் தொடர்ந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். நமது […]

இலங்கை செய்தி

வித்தியா கொலை வழக்கில் பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு விசாரணை

  • April 11, 2023
  • 0 Comments

கடந்த 2015ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டுப் பலாத்காரம் மற்றும் படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று (மார்ச் 20) நீதியரசர்களான ப்ரீதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த […]

இலங்கை செய்தி

டொலிகொம் மற்றும் லங்கா ஹாஸ்பிடல்ஸின் அரச பங்குகளை விற்க அனுமதி

  • April 11, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா ஹாஸ்பிடல்ஸ் ஆகிய இரு நிறுவனங்களிலும் திறைசேரி செயலாளரிடம் உள்ள பங்குகளை விலக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளதாக திறைசேரியின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, திறைசேரி செயலாளரிடம் அந்தந்த நிறுவனங்களில் உள்ள பங்குகளை விலக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளதாக திறைசேரியின் செயலாளர் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும்லங்கா ஹாஸ்பிடல்ஸ் பணிப்பாளர் சபைக்கு அறிவித்துள்ளார். கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்களான ஸ்ரீலங்கா டெலிகொம்  மற்றும் […]

இலங்கை செய்தி

நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய செயற்குழுவின் அனுமதியை இலங்கை பெற்றது

  • April 11, 2023
  • 0 Comments

நீட்டிக்கப்பட்ட  கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும். அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் அரசாங்கம் முயற்சித்து வரும் இலங்கைக்கு இது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது. இந்த மாத தொடக்கத்தில்,  […]

இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச பங்காளிகளின் ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் நன்றி தெரிவித்துள்ளார்

  • April 11, 2023
  • 0 Comments

IMF நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) இலங்கையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது இலங்கைக்கு $7 பில்லியன் வரையிலான நிதியுதவியை அணுக உதவும். நிதி நிறுவனங்கள் மற்றும் கடனாளிகளுடனான அனைத்து கலந்துரையாடல்களிலும் முழு வெளிப்படைத்தன்மைக்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். மேலும் விவேகமான நிதி நிர்வாகம் மற்றும் லட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் நிலையான கடனை அடைவதற்கு உறுதியளித்தார். இந்த பார்வையை அடைவதற்கு IMF திட்டம் மிகவும் முக்கியமானது மற்றும் சர்வதேச மூலதனச் […]

இலங்கை செய்தி

இலங்கையின் உணவு பாதுகாப்பு குறித்து கரிசனை!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையின் பொருளாதார நிலையும்  உணவு பாதுகாப்பும்  தொடர்ந்தும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. 2023 பெப்ரவரி மாதத்திற்கான உணவு பாதுகாப்பு நிலை குறித்த ஆய்வில் 32 வீதமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்வது தெரியவந்துள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் சந்தைகளில் விலைகள் தளம்பல் நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ள  உலக உணவு திட்டம் எனினும் சந்தைகள் தொடர்ந்தும் இயங்குகின்றன பல தரப்பட்ட பொருட்கள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

உள்ளுராட்சி தேர்தலை நடத்தாவிட்டால் எல்லை நிர்ணய விடயத்தில் பிரச்சினை ஏற்படும் – மஹிந்த தேசப்பிரிய!

  • April 11, 2023
  • 0 Comments

உள்ளுராட்சி தேர்தலை நடத்தாவிட்டால் எல்லை நிர்ணய விடயத்தில் பிரச்சினை ஏற்படும் – மஹிந்த தேசப்பிரிய! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறுவதற்கான சாத்தியம் அரிதாகவே உள்ளது. பொது இணக்கப்பாட்டுடன் தேர்தலை மூன்று அல்லது நான்கு மாத காலத்துக்குள் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், தேர்தலை நடத்தாவிட்டால் […]

error: Content is protected !!