கனடாவில் மாணவனின் தலை முடியை கத்தரித்த பாடசாலை; கோபத்தில் பெற்றோர்
ரொறன்ரோவில் ஆட்டிஸம் பாதித்த மாணவனின் தலை முடியை கத்தரித்த விவகாரத்தில் பாடசாலை நிர்வாகத்திடம் பெற்றோர் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு யார்க்கில் உள்ள ஜார்ஜ் வெப்ஸ்டர் தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவனின் முடியையே கத்தரித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த மாணவனுக்கு பிடித்தமான ஒன்று அவனது தலை முடி எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஏப்ரல் 4ம் திகதி பாடசாலை நேரத்தில் தொடர்புடைய மாணவனின் தலை முடியில் ஒட்டக்கூடிய, சிவப்பு நிறப் பொருள் காணப்பட்டதாகவும், […]













