மாநகர காவல்துறை ஆணையர் போக்குவரத்து விதிகளை தெரிவித்தார்
பெரும்பாலான தலைக்காயங்கள் சாலை விபத்துகளாலேயே ஏற்படுவதாக, புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.குறிப்பாக,ஆண்டுதோறும் உலக அளவில் 10 முதல் 12 சதவீத மக்கள் தலையில் காயம் ஏற்படுவதால் இறக்கின்றனர். இந்நிலையில் இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக கோவை ராயல்கேர் மருத்துவமனை சார்பாக தலைக்காயம் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. மருத்துவர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற,வாக்கத்தானை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன்ஙதுவக்கி வைத்து பேசினார். அப்போது அவர்,தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்றபடி […]













