யாழில் வீடொன்றினுள் நுழைந்த மரம் கும்பல் – உடமைகள் சேதம்
யாழில் வீடொன்றினுள் நுழைந்த மரம் கும்பலால் உடமைகள் சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதம் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. குறித்த வீட்டினுள் நேற்று முன்தினம் இரவு வேளை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 இற்கும் மேற்பட்ட வன்முறை கும்பல் வீட்டின் யன்னல் கண்ணாடிகள், கதவுகள், வீட்டில் இருந்த உடைமைகள் என்பவற்றை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். […]













