ஈராக் திருமண மண்டபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தீச்சம்பவம் – பலர் கைது

ஈராக் திருமண மண்டபத்தில் 100க்கு அதிகமானோரின் உயிரை பறித்த தீ விபத்து தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமண மண்டப உரிமையாளர், ஊழியர்கள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர் என செய்தி வெளியாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக 3 நாள் தேசியத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் முகமது ஷியா அல் சுடானி (Mohamed Shia al-Sudani) அறிவித்தார்.
திருமண விழாவின் போது நடந்த வாணவேடிக்கையால் தீ விபத்து ஏற்பட்டது. விருந்தினர்கள் நிரம்பியிருந்த மண்டபத்தை நெருப்பு சூழ்ந்தது.
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் மண்டபத்தில் நிறைந்திருந்தன. அது பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது என்று ஈராக் குடிமைத் தற்காப்பு இயக்குநர் அலுவலகம் கூறியது.
(Visited 5 times, 1 visits today)