பொழுதுபோக்கு

‘புஷ்பா 2’ திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசில்! வெளியான ஃபர்ஸ்ட் லுக்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த படம், ‘புஷ்பா’. பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார்.

ஃபஹத் பாசில், சுனில், அனசூயா, தனஞ்செயா உட்படப் பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது.

முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இன்று ஃபஹத் ஃபாசில் பிறந்தநாளை முன்னிட்டு ‘புஷ்பா 2’ படத்தில் அவரது கதாபாத்திர லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

முன்னணி மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

(Visited 9 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content