அஸ்வினுக்கு வாழ்த்து கூறினார் நடிகர் தனுஷ்

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரவிசந்திரன் அஸ்வின், இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் 500 விக்கெட்டுகளை கடக்கவுள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினர் முன்கூட்டியே வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் தனுஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“500 என்ற இலக்கை அடையுங்கள் அஸ்வின், ஓம் நமச்சிவாய” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)