1000 கோடியை தட்டித்தூக்கும் கூலி…

ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை ஈட்டும் என நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் உபேந்திரா, சத்யராஜ், சவுபின் ஷாயிர், ஸ்ருதி ஹாசன், ஆமீர்கான் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் பூஜா ஹெக்டே பாடல் ஒன்றில் சிறப்பு நடனம் ஆடியிருப்பதாக கூறப்படுகிறது.
படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படம் குறித்து அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் வியப்பாக பேசியிருக்கிறார் நடிகர் சந்தீப் கிஷன்.
அவர் கூறுகையில், “‘கூலி’ படத்தில் நான் நடிக்கவில்லை. நண்பர் என்பதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எனக்கு இந்தப் படத்தின் 45 நிமிட காட்சிகளை போட்டுக் காட்டினார். அதை பார்த்த பின் ரூ.1000 கோடியை படம் வசூலிக்கும் என்பதை நிச்சயமாக சொல்வேன்” என்று அவர் தெரிவித்தார்.