கோட்டாபயவுக்கு எதிராக வழக்கு தாக்கல்!!!! றிஷாட் பதியுதீன் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பல அரச அதிகாரிகளுக்கு எதிராக தம்மை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 01) பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பதியுதீன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் இணைந்து தம்மை பொறி வைத்து 5 வருடங்கள் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) அதிகாரிகள் தனக்கு எதிராகப் பொய்யான வாக்குமூலங்களை வழங்குமாறு தமது எல்லைக்குட்பட்ட அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாகவும், இதனால் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலிருந்தும் தன்னை விடுவித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
இதன்படி, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அறிவித்துள்ளார்.
மேலும், வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.