ஆசிய கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கான போட்டி 2023! கிரிக்கெட் ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான தகவல்
2023 ஆண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
அதன்படி இம்முறை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இலங்கையின் ஆர் பிரேமதாச சர்வதேச மைதானம், கொழும்பு, கண்டி பல்லேகலே சர்வதேச மைதானம், பாகிஸ்தானின் லாகூர் சர்வதேச மைதானம் மற்றும் முல்தான் சர்வதேச மைதானமும் போட்டிகளை நடத்தவுள்ளது.
அட்டவணைப்படி, பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி செப்டம்பர் 2ஆம் திகதி கண்டி பல்கெலே சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இறுதிப் போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.