உலகம்

ஈரானோடு வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும்!

ஈரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் 25% வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வரி நேற்று முதல் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.

“அதிகரித்து வரும்” போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி அந்நாட்டில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து இணையத் தடைகளை எதிர்பார்க்க வேண்டும்,.

மாற்றுத் தொடர்பு வழிகளைத் திட்டமிட வேண்டும், அவ்வாறு செய்வது பாதுகாப்பானது என்றால், ஆர்மீனியா அல்லது துருக்கி வழியாக ஈரானை விட்டு வெளியேறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை ஈரானில் இடம்பெற்று வரும் போராட்டங்களால் இதுவரை 648 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 18 வயதுக்குட்பட்ட ஒன்பது குழந்தைகளும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!