செய்தி தென் அமெரிக்கா

பெருவில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க மலையேறியின் உடல்

தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட ஹஸ்கரான் மலை அமைந்துள்ளது.

இந்த மலையில் கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்பிள் என்ற மலையேற்ற வீரர் பனிச்சரிவில் சிக்கி காணாமல்போனோர்.

பின்னர் நீண்ட நாட்களாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், தேடுதல் பணி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் ஸ்டாம்பிளின் உடல் ஹஸ்காரன் மலையில் உள்ள கார்டிலெரா பிளாங்கா மலைத்தொடரில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவரது உடல், உடைகள், மலையேற்றக் கருவிகள் மற்றும் காலணிகள் ஆகியவை பனியில் உறைந்து பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவரது உடைமைகளில் இருந்த பாஸ்போர்ட் மூலம் வில்லியம் ஸ்டாம்பிளினை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!