டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம்!

டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் விமானத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
C38 கேட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ அணைக்கப்பட்டதாகவும், மாலை 6:15 மணி நிலவரப்படி யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)