KGF – 3இல் நம்ம அஜித்… தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தப்போகும் AK

இந்த வருட தொடக்கம் அஜித்துக்கு தோல்வியை கொடுத்தாலும் அதன் பிறகு தொடர்ந்து வெற்றி முகத்தை தான் பார்த்து வருகிறார். அவ்வாறு விடாமுயற்சி தோல்விக்கு பிறகு குட் பேட் அக்லி படம் வெளியானது. இப்படம் வசூல் வேட்டையாடியது.
அதன் பிறகு கார் ரேசில் கலந்து கொண்ட அஜித்துக்கு அடுத்தடுத்து வெற்றி கொடுத்தது. அதோடு நேற்றைய தினம் பத்ம பூஷன் விருதையும் பெற்றிருந்தார். இதில் கேஜிஎஃப் பட இயக்குனருடன் அஜித் கூட்டணி போட இருக்கிறார்.
கே. ஜி. எஃப், சலார் போன்ற படங்களை இயக்கியவர் தான் பிரசாந்த் நீல். இவர் அஜித்தின் இரண்டு படங்களை அடுத்து அடுத்து புக் செய்து உள்ளாராம்.
முதலாவதாக அஜித்தை வைத்து தனி படமாக ஒரு படம் எடுக்க உள்ளார்.
அடுத்ததாக கேஜிஎப் 3 படத்தில் அஜித்தை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து எடுக்க உள்ளாராம். இதில் யாஷ் தொடர்பான காட்சிகளும் வர இருக்கிறதாம். இப்படம் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது.
கே ஜி எஃப் 2 படத்திலேயே இதன் தொடர்ச்சியை லீடாக இயக்குனர் கொடுத்திருந்தார். மேலும் இரண்டு பாகங்களும் வெற்றி அடைந்த நிலையில் இந்த படமும் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதோடு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படம் கொடுத்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அந்தக் குறையை பிரசாந்த் நீல் மற்றும் அஜித் கூட்டணி போக்க உள்ளது. மேலும் இந்த படங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.