சம்யுக்தாவுக்கு 2ஆவது திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்…
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன சம்யுக்தா இன்று கிரிக்கெட் வீரரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய சம்யுக்தா, விஜய்யின் வாரிசு, சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் போன்ற படங்களில் நடித்தார்.

சம்யுக்தாவின் முதல் கணவர் பெயர் கார்த்திக். இந்த ஜோடிக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்த நிலையில், அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற கையோடு விரைவில் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு இரண்டாம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சம்யுக்தா இரண்டாவது திருமணம் செய்துள்ள நபர் பிரபல கிரிக்கெட் வீரரான அனிருதா ஸ்ரீகாந்த். முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன் தான் இவர்.

அனிருதா ஸ்ரீகாந்த், ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஆடி இருக்கிறார். இவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவரும், சம்யுக்தாவும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இது அனிருதா ஸ்ரீகாந்துக்கும் இரண்டாவது திருமணம் தான்.






