நாகசைதன்யா ஏன் அது போன்ற படங்களை தேர்வு செய்தார்-காதல் மனைவி சோபிதா
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/567918-sob-1.webp)
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார். இவர் நடிப்பில் தண்டேல் திரைப்படம் இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது.
சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நாகசைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து பின், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று நடிகை சோபிதாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.
நாகசைதன்யா தனது காதல் மனைவி குறித்து பல நல்ல விஷயங்களை பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். அது போன்று நடிகை சோபிதாவும் தன் கணவர் நடித்து அவருக்கு பிடித்த மற்றும் பிடிக்காத படங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், நாகசைதன்யா நடிப்பில் வெளிவந்த பெஜவாடா படம் எனக்கு பிடிக்காது. நாகசைதன்யா ஏன் அது போன்ற படங்களை தேர்வு செய்தார் என்று நான் அவரிடமே கேட்டுள்ளேன்.
நாகசைதன்யா காதல் நாயகனாக நடித்த படங்கள் தான் எனக்கு பிடிக்கும். குறிப்பாக அவர் நடித்த ஏ மாய சேசாவே படம் மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நாகசைதன்யா சமந்தாவுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.