அர்ச்சனா கல்பாத்தியுடன் கை கோர்த்துள்ளார் சிவகார்த்திகேயன்

அமரன் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கைவசம் இரண்டு படங்கள் வைத்திருக்கிறார்.
சுதா கொங்கரா உடன் பராசக்தி படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிவகார்திகேயன் தனது படத்திற்காக ஏஜிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். அந்த படத்தை ஒரு பெரிய இயக்குனர் இயக்கப்போவதாகவும் அர்ச்சனா கல்பாத்தி பேட்டி கொடுத்து இருக்கிறார்.
இருப்பினும் அந்த இயக்குனர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் பற்றி பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
(Visited 1 times, 1 visits today)