செனகலில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் : வெடித்த போராட்டம்!
செனகல் அதிபர் மேக்கி சால் தேர்தலை ஒத்திவைக்க முடிவு செய்ததையடுத்து, நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்த பொலிஸார், பின்னர் பலரை கைது செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி கடந்த சனிக்கிழமை (03.02) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பிரதமர் அமினாதா டூரே மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் அடங்குவர்.
அந்நாட்டின் தனியார் சேனல் “வால்ஃப்” இந்த போராட்டத்தை நேரலையில் ஒளிபரப்பியபோது, அதன் சிக்னலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
(Visited 8 times, 1 visits today)