அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா…நடிகை ஹேமமாலினி நடனம்
அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 22ஆம் திகதி நடைபெற் இருக்கிறது. இதனை நடிகை ஹேமமாலினி நடனம் ஆட உள்ளார்.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு வரும் 22ம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அப்போது குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதை உ.பி. அரசு மேற்பார்வையிடுகிறது. ராமர் கோயிலுக்கு கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ராமர் கோயிலை, ஜனவரி 22-ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த விழாவுக்காக அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், அலியா பட், துர்கா ஸ்டாலின் எனப் பிரபலங்களுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் நூறு நாடுகளை சேர்ந்த 55 பிரதிநிதிகளும், ஆயிரக்கணக்கான விஐபிகளும், லட்சக்கணக்கான பக்தர்களும் இந்த விழாவில் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை ஒட்டி நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி நடனமாடி சிறப்பிக்க உள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்து இருப்பதாவது, ” பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பிரான் பிரதிஷ்டா விழா விரைவில் நடைபெற உள்ளது. வரும் 17ஆம் திகதி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடன நாடகத்தையும் வழங்க உள்ளேன் இது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்றார்.