உக்ரைனுக்காக உதவி கோரும் ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பங்காளிகளும் உக்ரேனில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும், உக்ரேனிய அகதிகளுக்கு ஆதரவளிக்க நன்கொடையாளர்களிடமிருந்து $4.2 பில்லியன் நிதி கோரியுள்ளனர்.
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனார்.
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் காரணமாக இந்த ஆண்டு 14.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அல்லது உக்ரைனின் மக்கள் தொகையில் 40% பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)