செங்கடலில் ஹுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா!
செங்கடலில் ஒரு கொள்கலன் கப்பலைத் தாக்கிய யேமனின் ஈரான் ஆதரவு ஹுதி கிளர்ச்சியாளர்களால் இயக்கப்பட்ட மூன்று கப்பல்களை அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர்கள் இன்று (31.12) தாக்கியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹூதிகள் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, தற்காப்பிற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதில் மூன்று படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடலைக் கடக்கும் போது 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படும் சிங்கப்பூரின் கொடியிடப்பட்ட, டென்மார்க்கிற்குச் சொந்தமான கொள்கலன் கப்பல் ஒன்றின் கோரிக்கைக்கு பதிலளித்ததாகவும், அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)





