சிறகடிக்க ஆசை சீரியலில் திடீர் மாற்றம் – என்ன தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.
முத்து-மீனா கதாபாத்திரம் தான் சீரியலின் ஹைலைட் ஜோடியாக உள்ளது. இப்போது கதையில் ரவிக்கு அறை இல்லாதது தான் பிரச்சனையே. இன்றைய எபிசோடில் அதற்கும் ஒரு முடிவு எடுக்கிறார் அண்ணாமலை.
தனது அறையை ரவிக்கு கொடுத்துவிட்டு ஹாலில் படுத்துக் கொள்கிறார். இப்போது அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இப்போது என்னவென்றால் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மாலை 7.30 அல்லது 8 மணிக்கு ஒளிபரப்பாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாற்றம் கூட பிக்பாஸ் 7 நிகழ்ச்சி முடிந்த பிறகே நடக்கும் என்கின்றனர்.
(Visited 12 times, 1 visits today)