சீனாவில் பிரபல்யமடைந்துள்ள விசித்திரமான உணவு – ஐஸ் கட்டிகளை சூடாக்கி விற்பனை
சீனாவின் ஹுனான் மாநிலத்தில் விசித்திரமான உணவு வகை ஒன்று பிரபல்யமடைந்துள்ளது.
இப்போது இந்த உணவு சமுக ஊடகங்களில் பரவலாக வலம் வருகிறது.
ஐஸ் கட்டிகளை மிதமான சூட்டில் வாட்டி எடுக்கிறார் கடைக்காரர்.
வெண்ணெயைப் பூசிய பின் அதன் மேல் மிளகாய்ப் பொடி, எள், வெங்காயத் தாள் போன்றவை தூவப்படுகின்றன.
பின் வாடிக்கையாளரிடம் அது கொடுக்கப்படுகிறது. “காரமாகவும், சுவாரசியமாகவும்” இருப்பதாக வாடிக்கையாளர் ஒருவர் காணொளியில் கூறுகிறார்.
சற்றுக் குளிர்ந்த பிறகு சாப்பிட வேண்டுமா என்று கேட்ட கேள்விக்குக் கடைக்காரர் சூடாக இருக்கும்போதே ஐஸ் கட்டிகளைச் சாப்பிடும்படி கூறினார்.
https://www.tiktok.com/@weskeyjacksun/video/7310470007824125191?embed_source=121355059%2C121351166%2C71788788%2C121331973%2C120811592%2C120810756%3Bnull%3Bembed_blank&refer=embed&referer_url=seithi.mediacorp.sg%2F&referer_video_id=7310470007824125191