அறிவியல் & தொழில்நுட்பம்

YouTubeஇல் கேம் விளையாடுவது எப்படி.? கூகுள் வெளியிட்ட அறிவிப்பு

உலகின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப், புதிய அம்சமான பிளேயபிள்ஸ்-ஐ (Playables) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் யூடியூப்பில் வீடியோக்கள் மட்டுமல்லாமல் நேரடியாக கேம்களையும் விளையாடலாம். இதற்கு பயனர்கள் எந்தவொரு கேமையும் டவுன்லோட் செய்யவோ அல்லது இன்ஸ்டால் செய்யவோ தேவையில்லை.

இந்த அம்சம், பயனர்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. முதலாவதாக, இது பயனர்களுக்கு புதிய கேம்களை முயற்சிக்க ஒரு எளிய வழியை வழங்குகிறது. பயனர்கள் எந்தவொரு பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யாமல், யூடியூப்பில் இருந்து நேரடியாக கேமை விளையாடலாம்.

இரண்டாவதாக, இந்த அம்சம் பயனர்களுக்கு தங்கள் மொபைலில் உள்ள ஸ்டோரேஜை சேமிக்க பெரிதும் உதவுகிறது. ஏனெனில் பயனர்கள் எந்தவொரு கேம்களையும் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை, எனவே அவர்கள் தங்கள் மொபைலில் உள்ள ஸ்டோரேஜை மற்ற பயன்பாடுகள் மற்றும் ஃபைல்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தலாம்.

பிளேயபிள்ஸ் அம்சத்தில், தற்போது சில எளிய கேம்கள் மட்டுமே சோதனைக்காக உள்ளன. அதில் ஆங்கிரி பேர்ட்ஸ் ஷோ டவுன் (Angry Birds Show Down) , பிரைன் அவுட் (Brain Out), டெய்லி கிராஸ்வேர்ட் (Daily Crossword) மற்றும் ஸ்கூட்டர் எக்ஸ்ட்ரீம் (Scooter Extreme) ஆகியவை அடங்கும். ஆனால், வரும் காலங்களில் பல்வேறு வகையான கேம்கள் இதில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், யூடியூப்பில் நேரடியாக கேம்களை விளையாடக்கூடிய இந்த பிளேயபிள்ஸ் அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் யூடியூப் பிரீமியம் சந்தாதாரராக இருக்க வேண்டும். இந்த அம்சத்தை ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப் வெப்பில் பயன்படுத்த முடியும். பிளேயபிள்ஸின் வெளியீட்டிற்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்ல.

இருந்தும் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

எப்படி கேம்களை விளையாடுவது.?

  • முதலில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் யூடியூப்பை ஓபன் செய்ய வேண்டும்.
  • பிறகு, கீழே வலதுபுற மூலையில் உள்ள உங்கள் ப்ரொபைலை (Profile) கிளிக் செய்து திறக்க வேண்டும்.
  • அடுத்து மேலே வலது புறம் அல்ல செட்டிங்ஸ் (Settings) ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் ட்ரை எக்ஸ்பெரிமெண்டல் அண்ட் நியூ ஃபீச்சர்ஸ் (Try new features) என்ற என்பதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.
  • அதில் பிளே கேம்ஸ் ஆன் யூடியூப் (Play games on YouTube) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • எக்ஸ்புளோர் ஐகானை கிளிக் செய்து பிளேயபிள்ஸ் என்பதற்குள் நுழைந்து கேம்களை விளையாடலாம்.
(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content