இலங்கை – இந்தியா படகு சேவைகள் மீளவும் ஆரம்பம்!
இந்தியா மற்றும் இலங்கை இடையே படகு சேவைகள் மீண்டும் தொடங்கும் சூழலில் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்ட அதிகாரிகள் காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாருக்கு விஜயம் செய்து பார்வையிட்டனர்.

வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பால்கே நேற்று (29.11) துறைமுகப் பகுதிகளை பார்வையிட்டார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையே இணைப்பை வலுப்படுத்த இரு நாட்டு மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்தது.

(Visited 10 times, 1 visits today)





