உலகம்

OpenAI – இன் தலைவரான சாம் ஆல்ட்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்!

செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகின் முன்னணி நிறுவனமான “OpenAI”-இன்   இணை நிறுவனராகவும் தலைவராகவும் இருந்த சாம் ஆல்ட்மேனை அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு நீக்கியுள்ளது.

இந்நிலையில் நிறுவனத்தின் 95% ஊழியர்கள் இயக்குநர் குழுவுக்கு கடிதம் அனுப்பி, இயக்குநர்கள் குழு பலவீனமாக உள்ளதாகவும், இந்த முடிவால் தங்கள் நிறுவனத்தின் விவகாரங்கள் சீர்குலைந்துவிடும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் தங்கள் தலைவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் ஆல்ட்மேன், நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக ஆல்ட்மேன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மைக்ரோசாப்ட் அறிவித்த சில நிமிடங்களில் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் “OpenAI” நிறுவனத்தில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டது தொழில்நுட்ப உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதன் முக்கிய அதிகாரிகளும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது சிறப்பு.

தங்களின் கோரிக்கைகளுக்கு நல்ல பதில் கிடைக்காவிட்டால், “OpenAI” நிறுவனத்தில் இருந்தும் ராஜினாமா செய்யப் போவதாக அந்த ஊழியர்கள் கூறுகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்