ஜெர்மனி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ஜெர்மனி நாட்டில் அதிதீவிர வலது சாரி கட்சிக்கு மக்களின் செல்லாக்கு தற்பொழுது அதிகரித்து வருகின்றது.
விரைவில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் இந்த கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
ஜெர்மனியின் அதிதீவிர வலது சாரி கட்சியாகவும் மற்றும் வெளிநாட்டுக்கு எதிரான கட்சியாகவும் கருதப்படுகின்ற A F T கட்சியானது ஜெர்மனியின் பலமிக்க இரண்டாவது கட்சியாக தெரியவந்து இருக்கின்றது.
அதாவது எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஒன்று ஜெர்மனியில் இடம்பெறுமாக இருந்தால் ஜெர்மன் நாட்டில் 21 சதவீதமான மக்கள் இந்த A F T கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிரதான கட்சிக்கு 26 சதவீதமான மக்கள் வாக்களிக்க கூடியதாகவும்,
S P D என்று சொல்லப்படுகின்ற ஆளும் கூட்டு கட்சியுடைய பிரதான கட்சிக்கு 17 சதவீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்றும்
பசுமை கட்சிக்கு 16 சதவீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் F T P என்று சொல்லப்படுகின்ற லிபரல் டெமோக்கரிஸ் கட்சிக்கு 6 சதவீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்றும்,
இடது சாரி கட்சியான லிங்ஸ் என்று சொல்லப்படுகின்ற கட்சிக்கு 5 சதவீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.