நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது!

அரசியலமைப்பின் முக்கிய திருத்தமாக உள்ள 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு கிடையாமு என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று (07.08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அம்சங்களை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகள் முரண்பட்டதாக உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதியால் செயற்பட முடியாது. 13 ஆவது திருத்தம் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 15 times, 1 visits today)