174 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலை – அமெரிக்க ஆய்வு நிலையம் வெளியிட்ட தகவல்
கடந்த 174 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலை ஜூன் மாதம், நிலவியுள்ளதாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சா்வதேச பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 20ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையை விட 33.9 பாகை பெரனைட் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டின் ஜூன் மாதம்தான் கடந்த 174 ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ள மாதமாகும்.
தற்போதுள்ள சூழலில், இதுவரை அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட முதல் 10 ஆண்டுகளில் 2023-ஆம் ஆண்டு இடம் பெறுவதற்கு 99 சதவீத வாய்ப்புகள் உள்ளன.
முதல் 5 ஆண்டுகளில் ஒன்றாவதற்கு 97 சதவீத வாய்ப்புகள் உள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.