ஜெர்மனியில் அமுலாகும் 39 யூரோவிலான புதிய பயண அட்டை!
ஜெர்மனி நாட்டிலே 49 யூரோ பயண அட்டை தற்பொழுது பாவணையில் இருக்கின்றது.
ஆனால் 39 யூரோவுக்கும் பயண அட்டை ஒன்று பாவணைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் 5ஆம் மாதம் முதலாம் திகதியி் இருந்து டொஷ்லான் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற 49 யூரோ பெறுமதியான பயண அட்டையானது நடைமுறையில் இருக்கின்றது.
49 யுரோ பெறுமதியான பயண அட்டையை ஜெர்மனியர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பசுமை கட்சியினுடைய கட்சி அங்கத்தவர் கூட்டத்தின் போது நோற்றின்பிஸ்பாலின் மாநிலம் போக்குவரத்து அமைச்சர் ஒலிவர் கேஷன் அவர்கள் புதிய ஒரு தகவலை தெரிவித்து இருக்கின்றார்.
அதாவது சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் ஏற்கனவே பொற்றுக்கொள்ளும் பயண அட்டையானது வருகின்ற இலை உதிர்காலத்தில் 39 யூரோக்களுக்கு இவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.
இந்நிலையில் பல்கலைகழக மாணவர்கள் செமஸ்டர் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற இந்த விஷேட பயண அட்டையை வருகின்ற 2023 – 2024 ஆம் ஆண்டு கால பகுதியில் இந்த பயண அட்டையை இவர்கள் 29 யுரோக்களுக்கு கொள்வனவு செய் முடியும் என்றும் கூறியிருக்கின்றார்.