கிரீன்லாந்து தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராகும் டென்மார்க் – அமெரிக்கா!
கீரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா முனைப்பு காட்டி வரும் நிலையில், இது தொடர்பில் விவாதம் நடத்த டென்மார்க் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் உரையாடல் நடத்த டேனிஷ் பாதுகாப்பு அமைச்சர் ட்ரோல்ஸ் லுண்ட் பவுல்சன் (Lund Poulsen) நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) கிரீன்லாந்து பற்றிய சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது டென்மார்கும் பேச்சுவார்த்தைக்கு இணங்கியுள்ளது.
ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே 80% அமைந்துள்ள கிரீன்லாந்து தீவில், சுமார் 56,000 பேர் பெரும்பாலும் இன்யூட் இனத்தவர்கள் வசிக்கின்றனர்.
அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் என ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதற்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





