“களம்காவல்” படத்தின் புதிய அப்டேட்…
நடிகர் மம்மூட்டியின் களம்காவல் திரைப்படத்தின் வெளியீடு பிற்போடப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மம்மூட்டி ரோர்சார்ச், புழு, பிரம்மயுகம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடித்துள்ள புதிய படம் ‘களம்காவல்’.
நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஜித்தின் கே ஜோஸ் இயக்கியுள்ளார். இதனை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்மூட்டி இணைந்து தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், களம்காவல் டிசம்பர் 5ஆம் திகதி வெளியாகும் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.






