சபரிமலை தங்கம் கொள்ளை – நடிகர் ஜெயராமுக்கு தொடர்பா?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் திருடப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பிரபல நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன், முன்னாள் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பராமரிப்பு பணிக்காக துவாரக பாலகர் சிலை கவசத்தை சென்னைக்கு கொண்டு சென்ற போது, அந்த சிலையை காட்சிப்படுத்திய பூஜையில் நடிகர் ஜெயராம் பங்கேற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, ஜெயராமனிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, இது குறித்து விளக்கமளித்துள்ள நடிகர் ஜெயராம், தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில், அந்த பூஜையின் பங்கேற்றதாகவும், 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு பிரச்னை வரும் என்று தான் நினைத்ததில்லை எனவும் கூறியுள்ளார்.





