ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் பெருமையை தேடித்தந்த சபேசன்…
ஜீ தமிழ் சரிகமப சீசன் 5 அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த தருணம் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த போட்டியின் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாகவே முடிந்துள்ளது. இந்த முடிவுகளால் யாருக்கும் கவலைகள் இல்லை.
இலங்கை நாயகன் சபேசனுக்கு வெற்றி மகுடம் கிடைக்கவில்லை என்றாலும், அதற்கு இணையாக முதல் ரன்னர் அப் என்ற இடத்தை பெற்றுள்ளார்.
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் கைகளால் வெற்றிக்கோப்பையை பெற்றுக்கொண்டார் சபேசன்
சரிகமப இறுதிச்சுற்றுக்கு தெரிவாகுவதே பெரிய கனவாக இருந்த சபேசனுக்கு முதல் ரன்னர் அப் என்ற வெற்றி கிடைத்துள்ளது ஒட்டுமொத்த இலங்கையர்களுக்குமே மகிழ்ச்சியான தருணமாக இருக்கின்றது.
இலங்கையின் அம்பாறை – விநாயகபுரத்தைச் சேர்ந்த சுகிர்தராஜா சபேசனின் பயணம் மேலும் தொடர ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.






