இளங்குமரனின் உரையால் சபையில் கடுப்பான அர்ச்சுனா!
கெமராவுக்கு முன்னால் வீரசனம் பேசுபவர், கெமராவுக்கு பின்னால் தமிழர்களை கொன்றொழித்தவர்களுடன் கூட்டு சேர்ந்து செயற்படுகின்றனர்.” என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“நாம் மக்களுக்கான அரசியல் செய்கின்றோம். சிலர் ஊடகங்களுக்காக அரசியல் செய்கின்றனர். அந்நபருக்கு ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற தமிழ் கலாசாரத்தைக்கூட பின்பற்ற தெரியாதுள்ளது.” எனவும் இளங்குமரன் எம்.பி. குறிப்பிட்டார்.
இளங்குமரன் எம்.பி. தனது உரையின்போது சிலர் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும் அவர் எவரினதும் பெயரை குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை.
எனினும், இளங்குமரனின் உரையை அடுத்து அர்ச்சுனா எம்.பி. ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
“நான் தமிழன், சிங்கள மக்களை காதலிக்கின்றேன். விடயதானத்துக்கு பொருத்தமில்லாத விடயங்களை இளங்குமரன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.” என்று அர்ச்சுனா குறிப்பிட்டார்.





