“படம் பார்க்க வர வேண்டாம்” கவின் அதிரடி அறிவிப்பு
அறிமுக இயக்குநர் விக்ரணன் இயக்கத்தில், இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில் நடிகர் கவின் நடித்துள்ள புதிய திரைப்படம் “மாஸ்க்”.
ஜிவி பிரகாஷ் இசையமைத்த இப்படத்தில் ருஹானி சர்மா நாயகியாகவும் ஆண்ட்ரியா வில்லியாகவும் நடித்திருக்கிறார்.
மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் ஆண்ட்ரியா உள்ளார். இப்படம் நாளை வெளியாவுள்ளது.

இந்த நிலையில், இதன் புரோமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் கவின் கூறிய விடயம் தான் இன்று ஹைலைட்…
“மாஸ்க் திரைப்படத்தைப் பார்க்க வரும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை கட் அடித்துவிட்டு திரையரங்கம் செல்ல வேண்டாம்.
உங்கள் கல்லூரி கடமைகளை முடித்துவிட்டு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சென்று பார்க்கலாம். சினிமா என்பது எண்டர்டெயின்மெண்ட் தான். அதனால், அதற்குள் எண்டர் ஆகி உடனே எக்ஸிட் ஆகவும் வேண்டும். அதுதான் நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.






